செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

கடம்பூர் பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம்

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டுகளில் 3 வார்டுகளில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்து போலியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது 
 
இதனை அடுத்து அந்த வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து 3 வார்டுகளிலும் சுயச்சை வேட்பாளர்களை வெற்றி பெற்றதாக அறிவிக்காமல் அந்த வார்டுகளில் தேர்தலை ஒத்தி வைத்து மற்ற வார்டுகளில் மட்டும் தேர்தலை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்
 
கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ஆணையத்தின் நெறிமுறை மற்றும் வழிமுறைகள் மீறப்பட்டால் 3 வார்டுகளில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும் புதிய தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.