தொடர்புடைய செய்திகள்
- மாணவியின் உடலை வாங்கி அடக்கம் செய்க: ஐகோர்ட் கிளை உத்தரவு!
- சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வரின் மகன்!
- மதமாற்றம்-ங்கர வார்த்தையே இல்ல... மாணவியின் திடுக்கிடும் மரண வாக்குமூலம்!
- மதம் மாற்றும் முயற்சியால் மாணவி தற்கொலையா? – போலீஸ் விசாரணை!
- பள்ளி மாணவி தற்கொலை - மதமாற்ற கட்டாயத்திற்கு தொடர்பில்லை!
மாணவி தற்கொலை வீடியோ பாஜக தயாரித்த போலி: கே.பாலகிருஷ்ணன்
மாணவி தற்கொலை வீடியோ பாஜக தயாரித்த போலி: கே.பாலகிருஷ்ணன்
அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக வீடியோ வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ போலியானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் செய்ய அளித்த நிர்பந்தமே காரணமென பாஜக போலியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது; விடுதியில் தனக்கு நேர்ந்த கொடுமையே தற்கொலைக்கு காரணம் என மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்
மாணவி மரணத்தை மதமாற்ற நிர்பந்தம் என இல்லாத ஒரு பிரச்சினையோடு இணைத்து அரசியல் ஆதாயம் அடைய பாஜக முயற்சிக்கிறது; தமிழ்நாட்டில் மதத்தை வைத்து வெறுப்பு அரசியலை கிளப்ப முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
