புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (22:03 IST)

பள்ளி மாணவி தற்கொலை - மதமாற்ற கட்டாயத்திற்கு தொடர்பில்லை!

தஞ்சையில் பள்ளி மாணவியை மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக எந்த தகவலும் இல்லை என விளக்கம். 

 
தற்போது 12 ஆம் வகுப்பில் படித்து வரும் மாணவி லாவன்யா தூய இருதய மேல்நிலைபள்ளியில் படித்து வருகிறார். இவர் செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
 
அப்போது அங்கு பரிசோதிக்க வந்த டாக்டரிடம், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற தொடர்ந்து வற்புறத்தி கடுமையாக திட்டியதாகவும் இதனால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் மருத்துவர்கள் இது குறித்து போலீஸில் தகவல் கொடுத்தனர். இதனிடையே இன்று மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இதனால் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் பள்ளி மாணவியின் பெற்றோர், பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்தவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்தார். 
 
இதனிடையே இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீஸாரின் முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது. இது குறித்து தஞ்சை எஸ்.பி. ரவளி பிரியா கூறியதாவது, தஞ்சையில் பள்ளி மாணவியை மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக எந்த தகவலும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். எனவே தற்போது மாணவியின் உடல் பெற்றுக்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.