1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 ஜூலை 2019 (12:07 IST)

”விஷம் குடிக்காத” பெண்ணுக்கு, விசித்திரமான தண்டனை அளித்த நீதிபதி!!

காரைக்குடி பகுதியில், விஷம் குடித்து தற்கொலை செய்வது போல் நடித்து, சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட பெண்ணிற்கு, நீதிபதி விசித்திரமான தண்டனை அளித்துள்ளார்.

கடந்த மாதம் காரைக்குடி பகுதியில், கார்த்திகா என்ற பெண், தன் கணவருடன் தகராறு ஏற்பட்டதால் தற்கொலை செய்ய போவதாக கூறி, தான் விஷம் அருந்தும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோ பெரும் வைரலாக பரவியது.

கார்த்திகாவின் வீடியோவைக் கண்ட, காரைக்குடியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி தினேஷ், கார்த்திகாவை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவனையில் அனுமதித்தார். ஆனால் கார்த்திகா, சோப் ஆயிலை குடித்து, விஷம் குடிப்பது போல் நடித்த விஷயம் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் பெரும் கோபமடைந்தார் போலீஸ் அதிகாரி தினேஷ்.

இதையடுத்து கார்த்திகாவின் வீடியோ, காரைக்குடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் நீதிபதி பாலமுருகன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்பு, போலீஸ் அதிகாரி தினேஷ் மற்றும் கார்த்திகா, இருவரையும் தீர விசாரித்த நீதிபதி, கார்த்திகாவிற்கு ஒரு விசித்திரமான தண்டனையை வழங்கினார்.

அதாவது, கார்த்திகா ஒரு மாத காலத்திற்கு தினமும் அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கே தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெறுவோருக்கு உயிரின் மதிப்பை விளக்க வேண்டும் என அந்த தண்டனையில் கூறப்பட்டது. இதனை கேட்ட கார்த்திக்கா, அதிர்ந்து போனார்.

இந்த விசித்திரமான தண்டனை, கார்த்திகவை போல் சமூக வலைத்தளங்களில் கவன ஈர்ப்பிற்க்காக வீடியோ பகிரும் பலருக்கும் இது ஒரு பாடமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.