திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 6 ஜூலை 2019 (15:43 IST)

உதயநிதி ஸ்டாலினின் பாய்ச்சல் ஆரம்பம்: புதிய தலைமையின் முதல் கூட்டம்

உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு, அவர் தலைமையில் திமுக இளைஞரணி முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.

திமுக இளைஞர் அணித் தலைவராக இரண்டு நாட்களுக்கு முன் பொறுப்பேற்றுக்கொண்டார் உதயநிதி ஸ்டாலின். அவர் பொறுப்பேற்ற பிறகு, அவர் தலைமையில் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் தேனாம்பேட்டையில் அன்பகத்தில் இன்று நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், இன்று நடைபெறுவது வெறும் கலந்துரையாடல் கூட்டம் மட்டுமே என்றும், நிர்வாகிகள் என்னிடம் எதிர்பார்க்கும் அனைத்தையும் தான் வருங்காலத்தில் பூர்த்தி செய்வதாகவும் கூறினார்.

மேலும் தனது சுற்றுப்பயணத்துக்கான தேதி முடிவாகவில்லை என்றும், தேதியை முடிவு செய்த பிறகு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.

இளைஞர் அணி செயலாளர் பதவிக்கு வந்தவுடன், தன்னுடைய முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தது, திமுகவின் இளைஞரணி தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணத்தின் மீது நம்பிக்கை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.