தொடர்புடைய செய்திகள்
- கரூர் மாவட்ட ஆட்சியரை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்ட ஜோதிமணி எம் பி!
- டிச.3 வரை பாஜக தொடர் போராட்டம் - அண்ணாமலை
- இதுவும் ஜிகாதி தேசம்தான்… வேளாண் சட்ட முடிவு குறித்து கங்கனா!
- ஒரு வருட போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி: நடிகர் கார்த்தி டுவிட்
- சட்டம் ரத்தாகும் வரை போராட்டம் - விவசாயிகள்
கடிதம் தரும் வரை போராட்டம்; ஜோதிமணி எம்.பி உள்ளிருப்பு போராட்டம்! – கரூரில் பரபரப்பு!
கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் முகாம் நடத்த கோரி ஜோதிமணி எம்.பி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் நல திட்டம் மூலம் கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடத்தி அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடிதம் அளித்திருந்தார்.
ஆனால் இதுவரை அதுகுறித்து ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய எம்.பி ஜோதிமணி ஆட்சியர் அலுவலகத்திலேயே நேற்று முதலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடத்துவதாக ஆட்சியர் கடிதம் அளிக்கும் வரை போராட்டத்தை தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
