1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (13:33 IST)

கொலை மிரட்டல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை...

மூன்று பேர் தன் வீட்டிற்கு வந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரை கவர்ச்சி நடிகை ஜோதிமீனா வாபஸ் பெற்றுள்ளார்.


 

 
70 மற்றும் 80 களில் கவர்ச்சி புயலாக வலம் வந்தவர் நடிகர் ஜோதி லட்சுமி. அவருக்கு பின் அவரின் மகள் ஜோதி மீனா சினிமாவிற்கு வந்தார். தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் அவர் நடித்தார்.
 
தற்போது அவர் தி.நகரில் கணவர் மற்றும் குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார். அந்நிலையில், தனது வீட்டிற்கு வந்த சிலர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
போலீசாரின் விசாரணையில் அவரது வீட்டிற்கு வந்தவர்கள் நண்பர்கள் எனவும், வோறொரு விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்ததாகவும் தெரியவந்தது.
 
இந்நிலையில், இன்று காலை அதே காவல் நிலையத்திற்கு வந்த அவர் தனது புகாரை வாபஸ் பெற்றார்.