செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (13:32 IST)

15 வயது மாணவனுடன் உல்லாசம் : வீடியோ எடுத்து மிரட்டிய ஆசிரியை

பயிற்சி நிலையத்தில் படித்த மாணவர்களை, போதைக்கு ஆளாக்கி, ஆபாச படம் எடுத்து அதை வைத்து பணம் பறித்து வந்த பெண் ஆசிரியையும் அவரது சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

 
ஆக்ராவை சேர்ந்த 15 வயது சிறுவன், கச்சேரி கேட் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி செண்டரில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு நிதின் சிங்கால் மற்றும் அவரது சகோதரி ரூச்சி சிங்கால் ஆகிய இருவரும் கல்வி பயிற்சி அளித்துள்ளனர்.
 
ஒரு நாள் ரூச்சி மற்றும் அவரது சகோதரி அஞ்சலி என்பவரும் சேர்ந்து அந்த மாணவனுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதில் மயங்கிய அவரை ஆபாசமாக படம் எடுத்தனர். அதன் பின் அதை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி அவரிடம் இருந்து ரூ.4 ஆயிரம் பணத்தை பறித்துள்ளனர். அப்பணத்தை அவர் வீட்டிலிருந்து திருடி கொண்டு கொடுத்ததாக தெரிகிறது. அதன் பின் ரூ.55 ஆயிரம் பணத்தை அவர் கொடுத்துள்ளார்.
 
அதன் தொடர்ந்து அவரை கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோக்களை பார்க்க வைத்து பாலியல் உறவில் ஈடுபட வைத்தனர். அதன் பின் அதையும் வீடியோ எடுத்து அவரை மிரட்டி பணம் பறித்துள்ளனர்.  வீட்டில் இருந்த  தங்க நாணயங்களை திருடி கொண்டு வந்து அவர் கொடுத்துள்ளார்.
 
அவர்களின் தொந்தரவு எல்லை மீறி சென்றதால் தற்போது அந்த மாணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மேற்கண்ட அனைத்தையும் அவர் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். 
 
விசாரணையில் ரூச்சி சிங்கால் மற்றும் அவரது சகோதரி அஞ்சலி ஆகிய இருவரும் சேர்ந்து பல மாணவர்களை மது மற்றும் ஆபாச படங்களுக்கு அடிமையாக்கி, அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தனர் என்பது தெரியவந்துள்ளது.
 
இதையடுத்து, அவர்கள் மீது குழந்தைகள் பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.