வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2019 (07:30 IST)

லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளை சம்பவம்: போர்வை விற்க வந்த ஐவர் தான் கொள்ளையர்களா?

திருச்சி நகைக்கடை லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில் புதுக்கோட்டையில் ஐவர் கும்பல் ஒன்று பிடிபட்டுள்ளதாகவும், பிடிபட்ட ஐவரிடம், தனிப்படையினர் விசாரணை செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் 5 பேரிடம்  நடத்திய விசாரணையில் அவர்கள் போர்வை விற்க வந்தவர்கள் எனவும் போர்வை விற்க வந்ததுபோல் நடித்து கொள்ளை சம்பவத்திற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.


திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்திருந்த லலிதா ஜுவல்லரி நகை கடையில் இருந்து தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் நேற்று கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்த நிலையில் கொள்ளையர்கள் குழந்தைகள் விளையாடும் விலங்குகளின் முகமூடி அணிந்து இருந்ததாகவும், இந்த கொள்ளைச் சம்பவத்தில் 5ல் இருந்து 6 பேர் வரை ஈடுபட்டு இருக்கலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது

இதனையடுத்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள்  தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 7 தனிப்படைகளும் திருச்சியில் உள்ள தனியார் விடுதிகளில் சோதனை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து ரகசிய தகவல் ஒன்று கிடைத்ததன் அடிப்படையில் புதுக்கோட்டை சென்ற தனிப்படை போலீசார் அங்கு பதுங்கியிருந்த ஐவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.