1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 2 அக்டோபர் 2019 (13:15 IST)

அனிமல் மாஸ்க் அணிந்து 100 கிலோ தங்கம் அபேஸ்!! 36 கோடி போன சோகத்தில் லலிதா ஜூவல்லர்ஸ்!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள லலிதா ஜூவல்லரியில் அதிகாலையில் 100 கிலோ தங்கத்தை இருவர் திருடி சென்றுள்ளனர். 
 
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியை வழக்கம் போல இன்று வந்து திறந்த ஊழியர்கள் நகை திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்கு புகார் கொடுத்துள்ளனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் நகைக்கடையின் பின்புற சுவரை ஓட்டை போட்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து நகைகளை கொள்ளையடித்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன் பின்னர் எவ்வளவு நகை திருடு போய் உள்ளது என கணக்கிடப்பட்டது. 
கணக்கீடுகளின்படி தரைத்தளத்தில் மட்டும் ரூ.36 கோடி மதிப்புள்ள் 100 கிலோ தங்கம் களவாடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னர் கடையில் உள்ள சிசிடிவியையும், அந்த சாலையில் உள்ள மற்ற கடைகளின் சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் சோதனைக்கு உட்படுத்தினர். 
 
கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சியில் திருடர்கள் நகையை திருடுவது பதிவாகியுள்ளது. குழந்தைகள் விளையாட்டிற்கு போட்டுக்கொள்ளும் விலங்குகள் முகம் பதித்த மாஸ்க், கையுறை ஆகியவற்றை போட்டுக்கொண்டு நகைகளை திருவது பதிவாகியுள்ளது. 
 
மேலும் அதிகாலை 2.11 மணியில் இருந்து 3.15 மணிக்குள் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதும் தெரியவந்துள்லது. திருடர்களை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.