செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (12:48 IST)

”2021 எலெக்‌ஷன்லயும் நாங்கதான்”: கெத்து காட்டும் ஜெயகுமார்

விக்கிரவாண்டி நாங்குநேரி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் எண்ணிக்கையில் இரு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்றுள்ள நிலையில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் 2021 தேர்தலிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் தற்போதைய நிலவரப்படி 92,976 வாக்குகள் முன்னிலையில் உள்ளது. அதே போல் நாங்குநேரி தொகுதியிலும் அதிமுக 52,155 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.

இதன் மூலம் அதிமுக-ன் வெற்றி ஓரளவு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், இது தர்மத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், இந்த தேர்தலின் வெற்றியை பார்க்கும்போது 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும்” எனவும் பெருமிதமாக கூறியுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தமிழகத்தில் சொற்ப வாக்குகளே பெற்று பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தற்போது இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது பாஜகவிற்கு எதிரான தமிழக மக்களின் மனநிலை என்னவானது என எதிர்தரப்பினர் சந்தேகத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.