1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jayalalitha said sasikala is my servent

சசிகலாவை பற்றி ஜெ. தன்னிடம் சொல்லியது இதுதான் - நத்தம் விஸ்வநாதன் அதிரடி

Jayalalitha
சசிகலாவிற்கு என்ன இடம் கொடுத்திருப்பதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியுள்ளார்.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின், ஓ.பி.எஸ் அணிக்கு தாவினார் நத்தம் விஸ்வநாதன். இந்நிலையில், ஓ.பி.எஸ் அணி சார்பில் திண்டுக்கல்லில் சமீபத்தில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
 
சசிகலா தரப்பிற்கு பயப்படாதவர்கள் ஓ.பி.எஸ் அணிக்கு வந்துள்ளனர். ஒப்பந்தம் உள்ளிட்ட பல காரியங்களை சாதிக்க நினைப்பவர்கள், சசிகலா பக்கம் சென்றுள்ளனர். எம்.எல்.ஏக்களை ஆடுகளைப் போல அடைத்து ரூ.3 கோடிக்கு விலை பேசிவிட்டனர். அதற்கு அவர்கள் மக்களிடம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
 
அதிமுக என்ற பூமாலைக்கு ஜெயலலிதா அழகு சேர்த்தார். அந்த பூ மாலை தற்போது குரங்குகள் கையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. 
 
2011ம் ஆண்டு சசிகலாவை வீட்டை விட்டு வெளியேற்றிய ஜெயலலிதா, சசிகலா எனது வீட்டு வேலையாள் மட்டுமே என எங்கள் அனைவரிடமும் கூறினார். ஆனால், தற்போது அவர்கள் ஆட்சி மற்றும் கட்சி இரண்டையும் பிடிக்க அசைப்படுகிறார்கள்” எனப் பேசினார்.
 
அடுத்த கட்டுரையில்
பணத்திற்காக நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன் - டெல்லியில் அதிர்ச்சி