பில்லு இட்லிக்கு இல்ல: இட்லி சாப்டாங்கன்னு சொன்னதுக்குதான்; தெறிக்கவிடும் மீம்ஸ்
ஜெயலலிதாவிற்கான உணவு பில் 1.17 கோடி என கூறிய அப்பல்லோ நிர்வாகத்தை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது சாப்பாட்டு செலவு மட்டும் ஒரு கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய் செலவாகியதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தது.
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையை கிண்டலடிக்கும் விதமாக நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு..