ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு: வெப் தொடராக இயக்கும் பிரபல இயக்குனர்

Last Modified செவ்வாய், 18 டிசம்பர் 2018 (08:40 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இப்போதே இரண்டு இயக்குனர்கள் திரைப்படமாக்கி வருகின்றனர். மிஷ்கின் உதவியாளர் பிரியதர்ஷினி என்பவர் இயக்கும் 'தி அயர்ன் லேடி' என்ற படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நித்யாமேனன் நடிப்பதாக கூறப்பட்டது. அதேபோல் இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வெப் தொடராக பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கவுள்ளாராம். 30 எபிசோட்களாக இந்த தொடர் உருவாகவிருப்பதாகவும், இந்த தொடர்
ஒரு முன்னணி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.


மேலும் ஜெயலலிதா கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் நடிக்கவிருப்பதாகவும், இந்த தொடரின் மற்ற முக்கிய கேரக்டர்களில் வினிதா, இந்திரஜித் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :