ஜெயலலிதா சாப்பாட்டு செலவு இத்தனை கோடியா? அப்பல்லோ நிர்வாகம் அதிர்ச்சி தகவல்
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது சாப்பாட்டு செலவு மட்டும் ஒரு கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய் செலவாகியதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2015 செப்டம்பர் 22ந் தேதி உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 5, 2015ல் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறப்பட்டு இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலரை விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், டாக்டர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், ஜெயலலிதாவை சந்தித்த அமைச்சர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அப்பல்லோ நிர்வாகம் ஜெயலலிதா சிகிச்சை செலவு, மற்றும் உணவு செலவு கணக்கை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார்கள். அதில் ஜெயலலிதாவின் சாப்பாட்டு செலவு மட்டும் ஒரு கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய் என குறிப்பிட்டுள்ளது. ஜெ.வின் சிகிச்சை செலவு 6.85 கோடி செலவாகியிருப்பதாக கூறியிருக்கின்றனர்.