செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 19 டிசம்பர் 2018 (19:42 IST)

இதுதான் அம்மா சாப்பிட்ட கோடி ரூபாய் மதிப்பு இட்லி: கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது சாப்பாட்டு செலவு மட்டும் ஒரு கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய் செலவாகியதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தது.  
 
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறப்பட்டு இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தில்தான் அப்பல்லோ நிர்வாகம் இந்த கணக்கை சமர்பித்து அதிர்ச்சியை கொடுத்தது. 
 
இந்நிலையில் இது குறித்து ஒரு டிவிட்டை பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி. அம்மா உணவகத்துல ஊருக்கே இட்லி ஒரு ரூபா.. அப்பல்லோவுல அம்மாவுக்கே இட்லி ஒரு கோடி ரூபா. அடேய் மலைமுழுங்கி அப்பலோடக்கருங்களா. நல்லா சொல்லுறீங்க கணக்கு என்று பதிவிட்டுள்ளார். 
 
மேலும் மீம் ஒன்றை பதிவிட்டு, யாருக்கும் கிடைக்காத அறிய புகைப்படம்: இதோ, அப்போலோவில் ஜெ.வுக்கு குடுத்த இட்லி இதுதான் என புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.