ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 மே 2023 (07:37 IST)

டிடிவி தினகரன் - ஓபிஎஸ் இணைப்பு குறித்து ஜெயக்குமார் கிண்டல்..!

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓபிஎஸ் அதிமுக அணி ஆகிய இரண்டும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சிபிஐ, சிபிஎம் ஆகிய இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் போல் இரண்டு பிரிவுகளாக இருந்தாலும் அம்மாவின் உண்மையான தொண்டர்களின் கட்சிகளாக எங்கள் அணி இருக்கும் என்றும் டி டி வி தினகரன் தெரிவித்தார்.
 
மேலும் நானும் சகோதரர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம் என்றும் எங்களிடம் மனதளவில் எந்த விதமான விருப்பமும் இல்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இணைப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலுடன் கூடிய இருப்பதாவது:
 
இதை பார்க்கும்போது தலைவரின் பாடலே நினைவில் வருகிறது
அன்றே கூறினார் புரட்சிதலைவர்!
உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனைகுணம்!
காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையே கெடுப்பதுவும் குரங்குகுணம்!
ஆற்றில் இறங்குவோரை கொன்று இரையாற்றல் முதலைகுணம்!
ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா!
 
Edited by Siva