திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 மே 2023 (21:07 IST)

''திமுக எதிரி; பழனிசாமி துரோகி''...ஓபிஎஸ் - டிடிவி.தினகரன் இணைந்து செயல்பட முடிவு

ttv dinakaran-pannersalvam
ஓபிஎஸ் , அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை இன்று  சந்தித்துப் பேசியுள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் இச்சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்பின் போது இருவரும் இணைந்து கூட்டாக அளித்த பேட்டியில்,  ''கடந்த காலங்களை மறந்துவிட்டு இருவரும் ஒன்றாக இணைந்துள்ளோம்.  சசிகலா தற்போது வெளியூர் சென்றுள்ளதால் விரைவில் அவரைச் சந்திப்பேன். தொண்டர்கள் மனதில் உள்ள அடிப்படையில், இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளோம் என்று  ஓபிஎஸ் கூறினார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கூறியதாவது:

எங்களுக்கு இடையே எந்தப் பகையும் இல்லை. ஆணவத்துடன், அரக்கர்கள் போல் செயல்படுபவர்களிடமிருந்து அதிமுகவை மீட்போம். பன்னீர்செல்வத்தை நம்பி இருட்டில் கூட கைப்பிடித்தபடி செல்ல முடியும். பழனிசாமியை நம்பி செல்ல முடியுமா?

திமுக எதிரி, பழனிசாமி துரோகி  நான் பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருந்தேன் என்று கூறினார்.