திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 30 ஜூன் 2023 (09:18 IST)

ஆளுநர் எடுத்த நடவடிக்கை சரி.. திமுக மீது மக்கள் சந்தேகம்.. ஜெயக்குமார்

jayakumar
செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் எடுத்த முடிவு சரிதான் என்றும் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக இவ்வளவு தூரம் ஒரு அரசு செயல்படுவது மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பி உள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் இலாக்காக்கள் வேறு அமைச்சருக்கு மாற்றி கொடுக்கப்பட்ட பின்னர் அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என தமிழக அரசு அரசாணை மூலம் அறிவித்தது. 
 
இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதற்கு கவர்னர் அனுமதி அளிக்கவில்லை என்றாலும் அரசாணை மூலம் அது நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு அதிரடியாக செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து கவர்னரால் நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.
 
இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இலாகா  இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீட்டிப்பது ஏன் என்ற கேள்வி எழுப்பிய அவர் ஆளுநர் எடுத்த நடவடிக்கை சரிதான் என்று கூறியுள்ளார். மேலும் திமுகவின் நடவடிக்கையால் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
Edited by Siva