செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 30 ஜூன் 2023 (09:11 IST)

செந்தில்பாலாஜி பதவி நீக்க விவகாரம்: முதல்வர் இன்று அவசர ஆலோசனை..!

அமைச்சர் செந்தில் பாலாஜியை கவர்னர் ரவி பதவி நீக்கம் செய்த நிலையில் அந்த பதவி நீக்கம் குறித்து அட்டர்னி ஜெனரலுடன் அவர் ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று இது குறித்து அவசர ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அதுமட்டுமின்றி சற்றுமுன் ஆளுநர் பதவி நீக்கத்திற்கான காரணம் குறித்து முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ள நிலையில் அந்த கடிதம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த ஆலோசனையில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கத்திற்கு முதலமைச்சர் தரப்பிலிருந்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்து விடும் என்று கூறப்படுகிறது.
 
Edited by siva