வெள்ளி, 20 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: செவ்வாய், 17 மார்ச் 2026 (11:57 IST)

காலம் பேசாது!... காத்திருந்து பதில் சொல்லும்!.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினி பதிலடி!...

adhav arjuna
நடிகர் ரஜினி 25 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக சொல்லிக் கொண்டிருந்தார்.. அவரின் திரைப்படங்களில் அரசியல் தொடர்பான வசனங்களை பேசினார்.. எனவே அவர் எப்படியும் அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நான் அரசியலுக்கு வருகிறேன்.. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நமது கட்சியும் இருக்கும் என அறிவித்தார் ரஜினி.

இதையடுத்து, ரஜினி ரசிகர்கள் உற்சாகமானார்கள். ஆன்மீக அரசியல் நடத்தப் போகிறேன் என்றார் ரஜினி. அரசியல் தொடர்பான வேலைகளும் நடந்தது. கட்சி நிர்வாகிகளை நியமித்தார். ஆனால் அப்போதுதான் உனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரசியலுக்கு வரும் முடிவிலிருந்து விலகுவதாக ரஜினி அறிவித்தார். இது அவர்களின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக முடிந்தது..

ஒருபக்கம் சில நாட்களுக்கு முன்பு தவெக விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பிய ரஜினியை திமுக மிரட்டி அவரை அரசியலுக்கு வராமல் தடுத்துவிட்டது என்று கூறியிருந்தார். இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இந்நிலையில், ரஜினி தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

adhav arjuna

அதில் தவெக கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னை பற்றி உண்மைக்கும் மாறான ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார்.. அவருடைய அவதூறு கருத்தை கண்டித்து எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தொல் திருமாவளவன், அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலருக்கும் நன்றி’ என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ‘காலம் பேசாது.. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’ என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.