வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 30 ஜூன் 2023 (07:46 IST)

செந்தில் பாலாஜி பதவி நீக்கம் விவகாரம்: அட்டர்னி ஜெனரலுடன் ஆலோசனை செய்ய கவர்னர் முடிவா?

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த நிலையில் அவரை பதவி நீக்கம் செய்து நேற்று ஆளுநர் ரவி உத்தரவிட்டார். இந்த உத்தரவு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இதை எதிர்த்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என தமிழக முதலமைச்சர் தெரிவித்தார் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ஆளுநர் ரவி இந்த விவகாரம் குறித்து அட்டர்னி ஜெனரல் அவர்களிடம் ஆலோசனை பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கிரிமினல் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதை சுட்டிக்காட்டிருந்த ஆளுநர் அவரை பதவி நீக்கம் செய்தார். 
 
இதற்கு கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து இன்று அவர் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனை கேட்க இருப்பதாகவும் அதன் பிறகு இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva