வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஜூன் 2023 (11:58 IST)

சிறுமியை நிர்வாணமாக்கி மிரட்டல்; பணம் நகை பறித்த தம்பதி கைது!

abuse
தர்மபுரியில் 15 வயது சிறுமியை நிர்வாணமாக்கி மிரட்டி வந்த தம்பதியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.



தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் பள்ளியில் படித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் பக்கத்து வீட்டில் இருந்தவர்களோடு பழகி வந்துள்ளார். அண்டை வீட்டில் இருந்த தம்பதியர் சிறுமியிடம் நல்ல விதமாக பேசி வந்த நிலையில் அந்த வீட்டை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற நபர் அந்த சிறுமியை நிர்வாணமாக்கி அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம், நகை தர வேண்டும் என சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் சிறுமியும் அவருக்கு பயந்து சிறிது சிறிதாக வீட்டில் இருந்த நகைகளை கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்து வந்துள்ளார். வீட்டில் இருந்த நகைகள் குறைந்திருந்ததை கண்டு சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் மேற்படி விவரங்கள் தெரிய வந்துள்ளது.

உடனடியாக சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தமிழ்ச்செல்வன் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது மனைவி தெய்வானையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K