1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jayakumar says about annamalai pathayathra

அண்ணாமலை செய்வதைத்தான் நாங்கள் செய்கிறோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar
பாஜகவை வளர்க்க அண்ணாமலை பாதயாத்திரை செய்கிறார் என்றும்  அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஊழலை சுட்டிக்காட்டும் கடமையை அண்ணாமலை செய்வது போல் நாங்களும் செய்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணி அச்சாணி இல்லாத வண்டி என்றும் அது என்றைக்கும் ஓடாது என்றும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். டாஸ்மாக் கடைகளில் மது பாட்டலுக்கு தற்போது கூடுதலாக தொகை வசூலிக்கப்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ரூ.21 லட்சம் தக்காளி லாரியுடன் டிரைவர் மாயம்.. கடத்தப்பட்டாரா என விசாரணை..!