1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 29 ஜூலை 2023 (10:28 IST)

என்னை தவிர அனைத்து பா.ஜ.க நிர்வாகிகளும் பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.: எஸ்.ஜி சூர்யா

என்னை தவிற அனைத்து பா.ஜ.க நிர்வாகிகளும் பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர் என எஸ்.ஜி சூர்யா வேதனையுடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
சென்னையில் கட்டிப்போட்டு இருக்கிறார்கள். மிகப்பெரிய மன வேதனையுடனும், கண்ணீருடனும் இராமேஸ்வரத்தில் நடக்கும் #என்மண்என்மக்கள் பாதயாத்திரை தொடக்க விழாவை சென்னையில் அமர்ந்துக்கொண்டு தொலைகாட்சியில் காண வேண்டிய பாவப்பட்ட சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். என்னை தவிற அனைத்து பா.ஜ.க நிர்வாகிகளும் ஒருவர் கூட விடாமல் அங்கு சங்கமித்து உள்ளனர். என் மீது பதியப்பட்ட இரு போலி அவதூறு வழக்கிலும் கிடைக்கப்பெற்ற ஜாமீன் மற்றும் முன்ஜாமீனில் தி.மு.க அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் நான் சென்னை விட்டு ஒரு மாதத்திற்கு நகரவே கூடாது என்ற ஆணையை போராடி பெற்று விட்டனர். நீதிபதிகள் மறுக்க முடியாத அளவிற்கான அழுத்தம் அரசு வழக்கறிஞர்களிடம் இருந்து வைக்கப்பட்டது. ஒரு நாள் மீறினால் கூட, அதை காரணம் காட்டி கைது செய்ய துடியாய் துடிக்கின்றனர்.
 
பா.ஜ.க-வினருக்கு திரு. அண்ணாமலை என்ற ஒருவர் இருக்கிறார் என்பது தெரிவதற்கு முன்பே, 2019-ஆம் ஆண்டில் இருந்து அண்ணன் எனக்கு பரிச்சயம். ஒரு சகோதரனாக மிக நீண்ட உரையாடல்களை அண்ணன் கட்சியில் சேர்வதற்கு முன்பே நிகழ்த்தி இருக்கிறேன். அண்ணனின் கைலாஷ் பயண அனுபவங்கள் குறித்து நிறைய சொல்ல சொல்ல மெய்சிலிர்த்து கேட்டு இருக்கிறேன். பாதயாத்திரை குறித்து எங்கள் கடந்த வருட அமெரிக்க பயணத்தின் போது மணிக்கணக்கில் பேசி இருக்கிறோம். என் மண் என் மக்கள் யாத்திரையை அவர் எத்துனை எதிர்நோக்கி இருந்தார் என்பதும், எத்துனை உன்னிப்பாக ஒவ்வொரு திட்டமிடலும் செய்துள்ளார் என்பதும் என்னை விட வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வரலாற்று சிறப்புமிக்க பாதயாத்திரையில் நேரில் கலந்துக்கொள்ள முடியாமல் போனது என் வாழ்நாள் முழுக்க என்னை உறுத்திக்கொண்டே தான் இருக்கும். யாரை குற்றம் சொல்வது என்று கூட தெரியாத ஆற்றாமையில் இதயம் கனக்கிறது.
 
இன்று இராமேஸ்வரத்தில் இருக்க வேண்டிய ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு பா.ஜ.க தொண்டரையும் மிஸ் செய்கிறேன். விரைவில் யாத்திரையில் கலந்துக்கொள்ள ஆவலாய் காத்திருக்கிறேன்…
 
Edited by Mahendran