1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2023 (14:53 IST)

அதிமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டால்.. ஜெயக்குமார் சவால்..!

அதிமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டால் எங்கள் ரியாக்சன் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பீர்கள் என அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். 
 
நேற்று தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை மீது அதிமுக மற்றும் திமுகவினார் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கூறிய போது ஊழலில் திளைத்த கட்சி திமுக என்று உலகத்திற்கே தெரியும், திமுகவுக்கு எதிராக ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக என்றும் திமுகவினர் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது நல்ல விஷயம் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் அதிமுகவின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடுவேன் என்று சொல்லவில்லை, அவ்வாறு சொல்லியிருந்தாலும் எங்களுக்கு மடியில் கனமில்லை, அதிமுகவின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடட்டும், அதன் பிறகு எங்கள் ரியாக்சன் எப்படி என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்’ என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran