திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (11:18 IST)

காங்கிரஸை வீழ்த்தனும்னா நாங்கதான் வரணும்! – ஜெயக்குமார் உறுதி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸை வீழ்த்த அதிமுகவால் மட்டுமே முடியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4ம் தேதி உயிரிழந்த நிலையில் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அரசியல் கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை எழுந்துள்ளது. அந்த தொகுதி திமுக கூட்டணியில் முன்னதாக காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த முறையும் காங்கிரஸே போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து யார் போட்டியிட போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்த இடைத்தேர்தல் குறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸை வீழ்த்த அதிமுகவால் மட்டுமே முடியும். இந்த இடைத்தேர்தலில் கண்டிப்பாக அதிமுக மகத்தான வெற்றி பெறும்” என அவர் கூறியுள்ளார். மேலும் பாஜக தனித்து போட்டியிடுமா என்ற கேள்விக்கு அவர் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என கூறியுள்ளார்.

தற்போது அதிமுகவில் உள் சலசலப்புகள் நிலவி வரும் நிலையில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பதிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Edit By Prasanth.K