வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2023 (08:04 IST)

ஈரோடு கிழக்கு தொகுதி.. அதிமுக கூட்டணியில் திடீர் திருப்பம்!

ADMK
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக திமுக உட்பட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. 
 
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டதை அடுத்து மீண்டும் அந்த தொகுதி தங்களுக்கு வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. 
 
இது குறித்து அதிமுக நிர்வாகிகள் நேற்று ஜிகே வாசன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ஈரோட்டு கிழக்கு தொகுதியில் அதிமுகவே போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக நேரடியாக களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva