திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 19 ஜனவரி 2019 (16:05 IST)

எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க தம்பிதுரை பக்கா ப்ளானிங்: டிடிவி பகீர்!

சமீபகாலமாக பாஜக குறித்தும் மோடி குறித்தும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அதிமுக முக்கிய தலைவரு மக்களவை துணை தலைவருமான தம்பிதுரை. அதிமுகவில் இருந்துக்கொண்டு இவர் மட்டும்தான் பாஜகவை அடிக்கடி விமர்சித்து வருகிறார். 
 
இந்நிலையில், சமீபத்தில் கூட தமிழக பாஜக தலைவர்கள் எங்களை அடிமை எண்ணத்தோடு பார்க்கிறார்கள். அதிமுக எம்பிக்களுக்காக பாஜக் எம்பிக்கள் குரல் கொடுப்பதே இல்லை. ஆதரவே கொடுக்காமல் கூட்டணி மட்டும் வேண்டும் என்பது நியாயமா என விமர்சித்து இருந்தார். 
தம்பிதுரையின் இந்த விமர்சனத்திற்கு பின்னர் என்ன காரணம் உள்ளது என்பதை டிடிவி தினகரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் தம்பிதுரை தொடர்ச்சியாக பாஜக குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். 
 
அவர் எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைக்க விரும்புகிறார் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியிருப்பது தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுக கட்சிக்குள் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.