புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 18 ஜூன் 2020 (08:28 IST)

தமிழகம் வந்தது பழனியின் உடல் – ராணுவ மரியாதையுடன் அடக்கம்!

லடாக்கில் இந்திய சீன ராணுவத்தினருக்கு இடையிலான மோதலில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த பழனியின் உடல் ராமநாதபுரத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையெ பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து சில தினங்களுக்கு முன் திடீரென சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் சீன எல்லையில் நேற்று இரவு நடந்த மோதலில் பலியானவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பலியான வீரர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கலுக்கலூர் பகுதியைச் சேர்ந்த பழனி.

இதையடுத்து அவரது உடல் நேற்றிரவு தனி விமானத்தின் மூலம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்திய பின், ராமநாதபுரத்தில் உள்ள சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் ராணுவ மரியாதையுடன் இன்று காலை அடக்கம் செய்யப்படும் என தெரிகிறது.