1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 17 ஜூன் 2020 (19:06 IST)

காவல் அதிகாரி கொரோனா தொற்றால் பலி ! முதல்வர் இரங்கல்

சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பால முரளி ( 47 ) கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில்  இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 50, 193 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவுக்கு இதுவரை 27,624 பேர் குணமடைந்துள்ளனர். 7 7377 பேர் இதுவரை கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 570 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  மாம்பலம் காவல் ஆய்வாளர் பால அமுரளி இன்று சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பாலமுரளியை இழந்து வாடும் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
மேலும், பாலமுரளி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.