1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 24 ஜனவரி 2022 (18:07 IST)

ஜனவரி 26ல் கிராமசபை கூட்டம் கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி தினம் மற்றும் தொழிலாளர் தினம் ஆகிய நான்கு நாட்களில் கிராமசபை கூட்டம் நடைபெறும் நிலையில் வரும் குடியரசு தினத்தில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
கொரோனா பாதிப்பு காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிராம சபை கூட்டம் என்பது கிராமப்புற நிர்வாகிகளுக்கு மிகவும் முக்கியமான கூட்டம் என்றும் இந்த கூட்டம் ரத்து செய்யப்படுவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர் 
 
டாஸ்மார்க் உள்ளிட்ட பல கடைகள் திறந்திருக்கும் போது கிராமப்புற வளர்ச்சியை முன்னிட்டு நடத்தப்படும் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்வதை ஏற்க முடியாது என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.