1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (15:49 IST)

2 ஆவது நாளாக போலிஸில் ஆஜர் ஆன திலீப்! தீவிர விசாரணை!

நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் நடிகர் திலிப் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

நடிகை பாலியல் வழக்கில் திலீப்பை கைது செய்யப்பட்ட திலீப், இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி ஒருவரை அவர் கொலை செய்ய முயன்றதாக மேலும் ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்பட்டு, அதற்காக அவர் கைது செய்யப்படலாம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்துக்கு செல்ல  ஜனவரி 27 ஆம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் திலீப்பிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தை குற்றப்பிரிவுக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து அவர் நேற்று காவல் நிலையத்தில் ஆஜர் ஆன நிலையில் 11 மணிநேரம் அவரிடம் விசாரணை நடந்தது. இதையடுத்து இரண்டாம் நாளான இன்றும் அவர் விசாரணைக்கு ஆளாகியுள்ளார்.