1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. james vasanthan talk about swagatha

ஸ்வாகதா சொன்ன மியூசிக் டைரக்டர் யாருன்னு ஈசியா கண்டுபிடிச்சிடலாம்!. ஜேம்ஸ் வசந்தன் பகீர்!...

swagatha
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாயாவின் சகோதரி ஸ்வாகதா. அடிப்படையில் இவர் ஒரு இசைக்கலைஞர். சினிமாவில் நிறைய கோரஸ் பாடியிருக்கிறார்.. சில திரைப்படங்களில் முழு பாடலையும் பாடியுள்ளார். இந்நிலையில்தான், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர் தன்னிடம் பாலியல்ரீதியாக மோசமாக நடந்து கொண்டதாகவும் அதை சிசிடிவி கேமராவில் பதிவு செய்து தன்னை மிரட்டியதாகவும் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

தன்னிடமிருந்து சில கோடி பணத்தை திருப்பி தருவதாக சொல்லி ஏமாற்றி விட்டதாகவும், பல பெண்களிடம் இப்படி பாலியல்ரீதியாக தவறாக நடந்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வருவதாகவும் பகீர் புகாரை கூறியிருந்தார். அதோடு அந்த பிரச்சினை காரணமாகத்தான் தற்போது அவர் சென்னையை விட்டு வெளியேறு ரிஷிகேசில் ஒரு துணிக்கடை நிறுவனம் நடத்தி வருவதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து யார் அந்த இசையமைப்பாளர் என்கிற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ‘இதை பெரிய அளவில் பரப்ப வேண்டும்.. இன்னொரு இசையமைப்பாளரின்  பெயரை கெடுக்கவோ, தொழில் பொறாமையிலோ நான் இதை சொல்லவில்லை. ஸ்வாகதா சொன்ன ஒன்றை கவனிக்க வேண்டும்.. அந்த இசையமைப்பாளரின் காமவேட்டை இப்போதும் தொடர்கிறது.. பல பெண்களுக்கு இந்த அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.. அந்த பலிகள் தொடர்வது உடனே நிறுத்தவும், பெண்கள் காப்பாற்றப்படவும் அந்த இசையமைப்பாளரின் பெயரை சொல்ல வேண்டும்.

இதை நாம் ஸ்வாகதாவிடம் வற்புறுத்த முடியாது. ஆனால் தேவையான எல்லா குறிப்புகளையும் அவர் தெளிவாக சொல்லிவிட்டார். அவர் கொடுத்த பேட்டியில் பலரும் அவர் யாரை சொன்னார் என யூகித்து விட்டனர்.. காவல்துறை ஒரு சில நிமிடங்களில் அவரை கண்டுபிடித்து கைது செய்ய முடியும்’ எனக்கூறியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.. முக்கிய குறிப்புகள் கொடுத்தாரா?