திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2023 (16:13 IST)

ஜல்லிக்கட்டு காளைகள் ரெடி! தயாராகும் மைதானம்! – ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்!

பொங்கல் நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பல பகுதிகளிலும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தை மாதத்தில் பொங்கல் வைத்து வழிபடுவதுடன் தொடரும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு உலகம் முழுவதும் பிரபலமான ஒன்றாகும். ஆண்டுதோறும் பல்வேறு மாவட்டங்களில் தை மாதத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் மதுரையில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

இதற்காக வாடிவாசலில் பூஜை செய்யப்பட்டு மைதானத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி வெற்றியாளர்களுக்கும், மாடுகளுக்கும் கார், இருசக்கர வாகனம், டிவி, தங்க காசு உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகள் மற்றும் வீரர்களுக்கான டோக்கன் ஆன்லைன் மூலமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K