திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 2 ஜனவரி 2023 (15:01 IST)

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தேதி அறிவிப்பு: பூஜையுடன் தொடங்கியது ஆயத்த பணிகள்

jallikattu
ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கல் தினத்தையொட்டி பாலமேடு அலங்காநல்லூர் அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனையடுத்து இன்று பாலமேட்டில் பூஜையுடன் ஜல்லிக்கட்டுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாலமேடு பேரூராட்சி நிர்வாகம் கிராம பொதுமக்கள் இணைந்து இந்த போட்டியை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
பாலமேடு வாடிவாசலில் இதற்கான சிறப்பு பூஜை நடைபெற்றது என்பதும் இந்த பூஜையில் பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தை சுத்தம் செய்யும் பணி தொடங்கி இருப்பதாகவும் பார்வையாளர்களும் கேலரி அமைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva