1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (15:04 IST)

ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் அம்பலம்; முதல் பரிசுக்காக மோசடி!

ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் அம்பலம்; முதல் பரிசுக்காக மோசடி!
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரில் உண்மை தெரிய வந்துள்ளது.

தை மாதத்தில் பிரபலமாக நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது. அதில் அதிகமான காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டில் அதிக காளைகளை அடக்கியதாக கண்ணன் என்ற நபர் முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் முதல் பரிசு பெறும் கண்ணன் காளைகளை அடக்குவதில் ஆள் மாறாட்டம் செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்த கோட்டாட்சியர் விசாரணை அறிக்கையில் கண்ணன் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.