புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (12:12 IST)

சாலையோரமாக நின்ற திமுக பிரமுகர் வெட்டிக்கொலை! – திருவள்ளூரில் பரபரப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை ஓரமாக நின்றிருந்து திமுக பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த மேல்மனம்பேடு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவர் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக துணை செயலாளராக இருந்து வந்துள்ளார்.

இவர் வெள்ளவேடு பகுதியில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தபோது 2 இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம ஆசாமிகள் திடீரென அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கருணாகரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் கருணாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் கருணாகரனின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல விடாமல் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததால் அவர்கள் உடலை எடுத்து செல்ல அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து மர்ம கும்பலை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கருணாகரன் கொல்லப்பட்டது அரசியல்ரீதியான காரணமா? அல்லது சொந்த பகையா? என்ற ரீதியிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.