ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (17:01 IST)

இந்துக்களுக்காக பாடுபடும் தலைவருக்கு சிறை!- அர்ஜூன் சம்பத் டுவீட்

arjun sambth
இந்துக்களுக்காக பாடுபடும் தலைவருக்கு சிறை என்று இந்து மக்கள் கட்சி நிறுவனன் அர்ஜூன் சம்பத் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரியில் இருந்து தனது ஒற்றுமை என்ற யாத்திரையைத் தொடங்க உள்ளார். இதற்காக கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த யாத்திரையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

கோவையில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயில் சென்ற அர்ஜூன் சம்பத்தை திண்டுக்கல்லில் வைத்து போலீசார் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அர்ஜூன் சம்பத் தன்  டுவிட்டர் பக்கத்தில், நள்ளிரவில் சுற்றிவளைத்து கைது செய்தது மட்டுமல்லாமல் அடிப்படை வசதிகளையும் தரமறுத்து மனரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் திமுக அரசு!

தமிழின துரோகி ராகுலுக்கு வரவேற்பு!
இந்துக்களுக்காக பாடுபடும் தலைவருக்கு சிறை!

- இதுதான் திமுக நிலைப்பாடு இந்து சமுதாயமே! எனப் பதிவிட்டுள்ளார்.

 பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா தன் டுவிட்டர் பக்கத்தில், எதிர்க்கட்சியாக இருந்த திமுக மாண்புமிகு பிரதமருக்கு எதிராக கோ பேக் மோடி என்று கூறி கருப்பு பலூன் விட்டது.ராஜ்பவன் முன் கருப்புக் கொடி ஆர்பாட்டம் செய்தது. ஆனால் ராகுல் காந்திக்கு எதிராக கறுப்புக்கொடி காட்ட சென்ற அர்ஜூன் சம்பத் அவர்களை நள்ளிரவில் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது எனப் பதிவிட்டுள்ளார்.