செப்டம்பர்15 ஆம் தேதி காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம் !
செப்டம்பர்15 ஆம் தேதி மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகத்தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல அறிவிப்புகள், திட்டங்கள் அறிவித்து வரும் நிலையில், செப்டம்பர் 15 ஆம் தேதி மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்.
இதன் முதற்கட்டமாக 1545 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. சமீபத்தில் உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.