1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jai Anand refuses allegations on Sasikala

இதெல்லாம் ஒரு வசதியா? சசிகலா பகடைக்காய்: திவாகரன் மகன் ஜெயானந்த் அதிரடி!

இதெல்லாம் ஒரு வசதியா? சசிகலா பகடைக்காய்: திவாகரன் மகன் ஜெயானந்த் அதிரடி!

சசிகலா
சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்து சிறைத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா கூறியது தமிழக மற்றும் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.


 
 
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விதிகளை வளைத்து சிறப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக சிறைத்துறை டிஐஜி ரூபா அம்மாநில டிஜிபி தத்தாவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். இதனையடுத்து பேட்டியளித்த அவர் அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக கூறினார்.
 
இந்நிலையில் இதுகுறித்து விசாரிக்க அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதனால் சசிகலா மீது சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் டிஐஜி ரூபாவுக்கு அந்த மாநில சிறை துறை டிஜிபி இரு முறை மெமோ கொடுத்துள்ளார். அந்த குற்றச்சாட்டை திசைத்திருப்ப சசிகலாவை பகடைக்காயாக்குகிறார் என்றார். மேலும் தண்ணீர், உணவு, படுக்கை வசதி அளிக்கப்படுவதை சிறப்பு வசதி என்று குற்றம்சாட்டினால் என்ன சொல்வது என்றார்.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க பரிந்துரைந்த பசுமை தீர்ப்பாயம்