புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 13 ஜூலை 2017 (17:01 IST)

கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க பரிந்துரைந்த பசுமை தீர்ப்பாயம்

ரூ.7000 கோடி செலவில் சுத்தம் செய்யப்பட்டு கொண்டிருக்கும் கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் பரிந்துரைத்துள்ளது.


 

 
இந்தியாவின் புனித நதியாக விளங்கும் கங்கை நதி அதிக அளவில் மாசுபட்டிருந்தது. இதனால் புனித நதி அதன் தூய்மையை இழந்தது. வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் கங்கை நதி சுத்தம் செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். 
 
இதைத்தொடர்ந்து மத்திய அரசு சார்பில் கங்கை நதியை ஹரித்வார் பகுதியில் சுத்தம் செய்ய ரூ.7000 கோடி செலவு செய்யப்பட்டது. இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம், கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என பரிந்துரைந்துள்ளது.