1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jaffer sadik partner arrested in chennai

ஜாபர் சாதிக் கூட்டாளி சென்னையில் கைது.. டெல்லி அழைத்து சென்றதாக தகவல்..!

ஜாபர் சாதிக்
போதைப் பொருள் கடத்திய வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஜாபர் சாதிக் கூட்டாளி சென்னையில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் டெல்லிக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னாள் டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதற்கு மூளையாக இருந்து செயல்பட்டது ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில் சமீபத்தில் அவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார் என்றும் அதன் பிறகு அவரிடம் விசாரணை நடந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கூட்டாளி சதா என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை டெல்லிக்கு போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் இவைதான்: மேலிடத்திற்கு அனுப்பப்பட்ட பட்டியல்..!