புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (16:53 IST)

அத்தி வரதர் வெளியில் வந்ததால் நல்ல மழை பெய்துள்ளது - பிரேமலதா விஜயகாந்த்

அத்திவரதர் குளத்தில் விட்டு வெளியே வந்தாதால்தான்,தமிழகத்தில் நல்ல மழை பெய்துள்ளதால் தேமுதிக பொருளாளர் பிரேமதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவம் இன்று 38 வது நாளை எட்டியுள்ளது.  நின்ற கோளத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் பலரும் சென்றுள்ளனர். 
 
இந்நிலையில் இன்று பிரேமலதா விஜயகாந்த், அத்திவரை தரிசிக்க சென்றார்.  அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : அத்திவரதர் வெளியில் வந்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம் என்று தெரிவித்தார்.