ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (13:46 IST)

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கோடைவெயிலால் தாக்கம் மற்றும் தண்ணீர் பிரச்சனையால் தமிழகமே ஸ்தம்பித்து போனது. ஓட்டு மொத்த மக்களும் தண்ணீருக்காகப் போராட்டம் நடத்தினர். இது ஆளும் கட்சிக்கு பெரும்  பிரச்சனையாக உருவெடுத்தது. இந்நிலையில் சில வாரங்களாக மழைபெய்து தமிழக  மக்கள் தாகம் தீர்த்து, மண்ணில் நீர்வளத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக  அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், ஆகிய கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இன்று மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மாலை அல்லது இரவு வேளையில் மழைபெய்யலாம் என்றும், அதேசமயம் மற்ற மாவட்டங்களில் மழை பெய்ய சாதகமான சூழல் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.