''நடந்தது எதிர்பாராத விபத்து, நான் ஸ்டண்ட் செய்யவில்லை''- டிடிஎஃப் வாசன்
நடந்தது எதிர்பாராத விபத்து, நான் ஸ்டண்ட் செய்யவில்லை என்று டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.
யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக அடிக்கடி இவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார்கள் குவிந்து சில முறை அவர் கைதும் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் பிரதான சாலையில் பைக்கில் வீலிங் செய்ய முயன்ற டிடிஎஃப் வாசன் விபத்துக்கு உள்ளனார். இந்த விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக, டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்வதால், அவரது லைசென்ஸை ரத்து செய்யவும் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த நிலையில், மருத்துவமனையில் கை எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்த டிடிஎஃப் வாசன் டிஸ்சார்ஜ் ஆகி தனது நண்பர் அஜீஸ் என்பவரது வீட்டிற்கு ஓய்வுக்கு சென்றிருந்த நிலையில் காஞ்சிபுரம் போலீஸார் அவரை கைது செய்த நிலையில், காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆரை ஆஜர்படுத்தினனர்.
இந்த நிலையில், போலீஸார் அவரை அழைத்துச் சென்றபோது, போலீஸார் டிடிஎஃப் வாசனிடம் இதுபற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், நடந்தது எதிர்பாராத விபத்து, ஸ்டண் செய்யவில்லை… பைக்கில் இருந்து ஸ்லிப் ஆகி கீழே விழுந்து விட்டேன் என்று டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.