1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (09:25 IST)

டிஸ்சார்ஜ் ஆன டிடிஎஃப் வாசன் திடீர் கைது! – காஞ்சிபுரம் போலீஸ் அதிரடி!

TTF Vasan
யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக அடிக்கடி இவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார்கள் குவிந்து சில முறை அவர் கைதும் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் பிரதான சாலையில் பைக்கில் வீலிங் செய்ய முயன்ற டிடிஎஃப் வாசன் விபத்துக்கு உள்ளானார். இந்த விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிடிஎஃப் வாசன் மீது இதுகுறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது லைசென்ஸை ரத்து செய்யவும் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது.

மருத்துவமனையில் கை எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்த டிடிஎஃப் வாசன் டிஸ்சார்ஜ் ஆகி தனது நண்பர் அஜீஸ் என்பவரது வீட்டிற்கு ஓய்வுக்கு சென்றார். இந்நிலையில் தற்போது அவரை காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K