திங்கள், 25 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2023 (12:32 IST)

யூடியூபர் TTF வாசன் மீது போலீஸார் வழக்குப் பதிவு

ttf vasan
யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக  பாலுசெட்டி சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக அடிக்கடி இவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார்கள் குவிந்து சில முறை அவர் கைதும் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் அருகே பிரதமான சாலையில்  சென்று கொண்டிருந்த போது வீலிங் செய்ய முயன்றார். அப்போது, அவரின் இரு சக்கர வாகனம் நிலைகுலைந்து விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த வாசன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முக்கியசாலையில் பைக்கில் வீலிங் செய்த வாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது. கவனகுறைவாகச் செயல்படுவதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (IPC 297/337)டிடிஎப் வாசன்  மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.