ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (13:05 IST)

சும்மா இருந்தால் கூட எதிர்க்கட்சிகள் விமர்சிப்பார்கள் - அமைச்சர் உதயநிதி

udhayanithi
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று திராவிட மாடலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

‘’கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் பயனாளிகளான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதம் 1000 எனும் இந்த மகத்தான திட்டத்தை தமிழ்நாடு மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய ஒன்றியமே வாழ்த்துகிறது’’ என்று தெரிவித்திருந்தார்.

மேலும், ‘’மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தகுதியானவர்களுக்கு கண்டிப்பாக திட்டம் சென்றடையும், மக்கள் வரவேற்பு கிடைக்கும்போது, எதிர்க்கட்சிகள் கூறுவதை பொருட்படுத்த வேண்டாம்….சும்மா இருந்தால் கூட எதிர்க்கட்சிகள் செய்வார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.