காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!
தெற்கு மும்பையில் மாலை நடைப்பயிற்சியின்போது காணாமல்போன 79 வயது மூதாட்டி சாயரா பீ தாஜுதீன் முல்லாவின் குடும்பத்தினர் பதற்றமடைந்தனர். ஆனால், அவரது பேரன் முகமது வசீம் அயூப் முல்லாவின் சாமர்த்தியத்தால், அவர் விபத்தில் சிக்கியது உடனடியாக தெரியவந்தது.
பேரன் வசீம் முல்லா தனது பாட்டியின் கழுத்து சங்கிலியில் ரகசியமாக பொருத்தியிருந்த ஜிபிஎஸ் டிராக்கர் கருவியை உடனடியாக செயல்படுத்தினார். அந்த ஜிபிஎஸ் கருவி, அவரது பாட்டியின் இருப்பிடத்தை பரேலில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையில் காட்டியது.
செவ்ரி பகுதியில் இருசக்கர வாகனம் மோதியதால் காயமடைந்த சாயரா பீ முல்லாவை, அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தலையில் காயம் அடைந்திருந்த மூதாட்டி, தற்போது ஜே.ஜே. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சைக்கு நல்லமுறையில் குணமடைந்து வருகிறார்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சரியான நேரத்தில் செயல்பட்டதால், மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டார்.
Edited by Siva